BBC News, தமிழ் - முகப்பு
Top story
வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
"ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
அரசியலில் யாருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நாம் இருக்கக்கூடாது. எல்லோரிடமும் நன்மதிப்பு கிடைத்தால் போதும். எனக்கு நேரடியாக ஆதரவு தரவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் மனதின் ஓரத்தில் நான் ஜெயித்தால் நல்லது என்று அவர்கள் நினைத்தால் போதும் என்கிறார் குஷ்பு.
கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார்.
''பெண்களுக்கு 'வாழ்க' சொல்லக்கூட தயங்குகிறார்கள்'' -பெயரளவுக்குதான் முக்கியத்துவமா?
''பெண் தலைவர்கள் தலையெடுக்கிறார்கள் என்பது ஆண்களுக்கு ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிலும் பாரபட்சம், அச்சுறுத்தல் ஆகியவற்றை நான் சந்தித்திருக்கிறேன்," என்கிறார் குஷ்பு
அதிமுக அலுவலகம் சூறை, பிரசார வாகனத்தை சேதப்படுத்திய தொண்டர்கள் - என்ன நடந்தது?
நான் கொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை, அரசியல் சமந்தமான வழக்கு மட்டுமே உள்ளது. கட்சிக்காக பேசச் சென்றபோது ஏற்பட்ட பிரச்னையைக் காரணம் காட்டி எதற்காக என்னை நீக்க வேண்டும்? என்கிறார் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிசாமி
தினகரனால் பாதிக்கப்படப் போவது எடப்பாடியா, ஸ்டாலினா?
அ.ம.மு.க உடனான பேச்சுவார்த்தை ஒருவேளை தோல்வியடைந்தால், `நீங்கள் எல்லாம் தனித்துப் போட்டியிடத் தயாரா?' என தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், வேட்பாளர்களிடம் கேள்வியெழுப்பினர். இதற்குச் சிலரிடம் இருந்து சரியான பதில் வராததும் கூட்டணியை நோக்கி தே.மு.தி.கவை தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது.
காணொளி, செயற்கை இறைச்சியால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதியாகுமா?, கால அளவு 3,27
விலங்குகளின் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதன் மூலம் இறைச்சி தயாரிக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. இதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது.
பிபிசி தமிழுடன் இணைந்து மக்களை சந்திக்கும் புல்லட் பெண்கள்
"மிக சவாலான நேரத்தில் தமிழ்நாட்டுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதாவது கொரோனா பெருந்தொற்று என்ற மிகப்பெரிய சவால் மிகுந்த நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதையும் தாண்டி எத்தனையோ சவால்களை மக்கள் தினமும் எதிர்கொள்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் பேசப் போகிறோம்"
ஓபிஎஸ் சொத்து மதிப்பு கிடு, கிடு உயர்வு - இபிஎஸ், ஸ்டாலின், உதயநிதி சொத்து மதிப்பு தெரியுமா?
ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவர், 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது அசையும் சொத்து ரூ.55 லட்சம் ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.5.19 கோடி ஆக இருப்பதாக மதிப்பிட்டு வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் - நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியவை
கொரோனா: தடுப்பூசி, பக்க விளைவுகள், சிகிச்சை, தப்பிக்கும் வழி - அதிமுக்கிய தகவல்கள்
கொரோனா வைரஸ்: தடுப்பூசி, பக்க விளைவுகள், புதிய வகை, தப்பிக்கும் வழி - அதிமுக்கிய தகவல்கள்
கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
கோவிட்-19: கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
காணொளி, அதிமுக தேர்தல் அறிக்கை - முழு விவரம், கால அளவு 2,52
அதிமுக தேர்தல் அறிக்கை - முழு விவரம்
காணொளி, ஜஸ்ப்ரித் பும்ராவை கரம் பிடித்த சஞ்சனா கணேசன் - யார் இவர்?, கால அளவு 3,32
2015 ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரிலிருந்து தன் விளையாட்டு தொகுப்பாளர் பயணத்தைத் தொடங்கினார் சஞ்சனா. அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த பல்வேறு முன்னணி தொடர்களிலும் தொகுப்பாளராகப் பங்கேற்று பிரபலமடைந்தார்.
காணொளி, புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை, கால அளவு 2,25
அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத் தலைவர் ஹில்மி அகமது, புர்காவில் இருக்கும் நபர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டால், "அடையாளம் காண்பதற்காக, முகத்தை மூடிய துணியை அகற்றுவதற்கு யாருக்கும் ஆட்சேபனை இருக்காது" என்று கூறினார்.
காணொளி, "கர்நாடக இசை கற்றுக் கொள்ள சாதி சான்றிதழ் கேட்டனர்" - கானா பாடகி இசைவாணி, கால அளவு 11,00
பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த கானா பாடகி இசைவாணி தனது இசைப்பயணம் குறித்தும், தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.
காணொளி, இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை - ரூ100 கோடி முடங்கும் அபாயம் - என்ன நடக்கிறது?, கால அளவு 3,59
இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை - ரூ100 கோடி முடங்கும் அபாயம் - என்ன நடக்கிறது?
பிற செய்திகள்
4 தொகுதிகளில் யார் வேட்பாளர்? ராகுலுக்கு சென்ற பட்டியல்! தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது?
பிபிசி தமிழிடம் பேசிய விஜயதரணி ஆதரவாளர் ஒருவர், `` விளவங்கோடு தொகுதியை சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு ஒதுக்கக் கூடாது என அந்த மாவட்ட தலைவர் உள்பட 10 பேர் மட்டுமே பிரச்னை செய்கின்றனர். அவர்களில் 4 பேர் எந்தக் கட்சி என்றே தெரியவில்லை. `சிட்டிங் தொகுதிகளில் தவறு செய்ய வேண்டாம்' என கே.எஸ்.அழகிரியிடம் விஜயதரணி கூறிவிட்டார்," என்றார்.
வேகப்புயல் பும்ராவை மணம் முடித்த சஞ்சனா கணேசன் யார்?
சஞ்சனாவின் தந்தை கனேசன் ராமசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர். புனேவிலுள்ள அலானா மேலான்மை அறிவியல் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். அம்மா சுஷ்மா கனேஷன் மராத்தி. அவர் வழக்கறிஞராக உள்ளார். சகோதரி ஷீதல், பல் மருத்துவர்.
மாறிவரும் பிரசார முறைகள்: தமிழக மக்களின் உள்ளத்தை கவரும் உத்தி எது?
தேர்தலை பொறுத்தவரை, கட்சிகள் மாறலாம், அவற்றின் காட்சிகள் மாறலாம் அல்லது கொள்கைகள் மாறலாமே தவிர, ஆட்சிக்கட்டிலில் அமர விரும்பும் அனைவரும் இலக்கு வைப்பது ஒன்றே ஒன்றைத்தான் - அதுதான் மக்களின் வாக்கு.
32 ஆண்டுகளாக கட்சிக்கொடி, தோரணம் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் கரூர் கிராமம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள இந்த குள்ளம்பட்டி கிராமத்தில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 400-க்கும் அதிகமான வாக்குகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளன. ஆனாலும் 32 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியாக தேர்தலை சந்தித்து வருகிறது இந்த கிராமம்.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம்
இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,58,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Ind vs Eng: அறிமுக போட்டியிலேயே அரைசதம், ஆட்ட நாயகன் விருது - யார் இந்த இஷன் கிஷன்?
சாம் கரணின் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தையும் பௌண்டரியாக்கினார். கேப்டன் கோலி ஒருபக்கம் அதிரடி காட்டியதால், எந்த நெருக்கடியும் இல்லாமல் தன் நேச்சுரல் கேமை ஆடினார் கிஷன். பௌண்டரிகள் மட்டுமல்லாமல் ஸ்டிரைக் ரொடேட் செய்துகொண்டிருந்ததால் இந்தியாவின் ரன்ரேட் சீராக சென்றுகொண்டிருந்தது. ஓரளவு வேகமாக ஆடிய கிஷன், பவர்பிளேவின் கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார்.
கருணாநிதி, ஜெயலலிதா போட்டியிடாத முதல் சட்டமன்றத் தேர்தலா இது? உண்மை என்ன?
தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தி.மு.க. தொண்டர்களில் பலர் மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் பெயர் இல்லாத முதல் வேட்பாளர் பட்டியல் இதுதான் என சமூக வலைதளங்களில் வருத்தத்துடன் கருத்துகளை பதிவுசெய்தனர். உண்மையில் மு. கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயிரோடு இருக்கும்போது எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கிறார்களா?
மியான்மர் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலி; சீன சொத்துகள் சூறை
மியான்மரில் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் உள்ள ஒரு பகுதியில், ஞாயிறன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களிடம் தடிகளும் கத்திகளுமே இருந்துள்ளன.
அதிமுக கூட்டணி விலகலுக்கு என்ன காரணம்? - விவரிக்கும் பிரேமலதா
எங்களிடம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், கூட்டணி உடையக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருந்தோம். எடப்பாடி எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அளவு பக்குவம் எங்களுக்குக் கிடையாது என்பது உண்மைதான்.
தேர்தல் வரலாறு: ராஜீவ் கொலை நடந்தது எப்போது? ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தது எப்படி?
13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989ல் ஆட்சிக்கு வந்திருந்த தி.மு.க. விறுவிறுப்பாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை ஆகியவற்றை கொண்டுவந்தது. மலிவு விலை மது திட்டம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததாக எழுந்த புகார் ஆகியவை அதற்கு அவப்பெயரை தந்தன.
மூக்கை உரசிய புல்லட்: முசோலினியை கொல்ல முயன்ற ஐரிஷ் பெண்ணின் கதை
இருபதாம் நூற்றாண்டில் பாசிசத்திற்கு எதிராக ஐரோப்பாவில் பல தனிமனிதர்கள் வீரதீர செயல்களை செய்துள்ளனர். அவற்றில் வயலட் கிப்சன் செய்த இந்தச் செயல் வரலாற்று பக்கங்களுக்குள் புதைந்து போனது.
தேர்தல் நடத்தை விதிகள் என்ன? வாக்காளர்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம்.
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்த இலங்கை
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது மேற்கு முனையம் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.
குஜராத் மோட்டெரா ஸ்டேடியம் - இங்கு படைக்கப்பட்ட சாதனைகள் என்னென்ன?
மோட்டெரா விளையாட்டு அரங்கம் மற்றும் சாதனைகள் அதன் தொடக்க காலத்தில் இருந்தே நெருக்கமான அம்சங்களாக இருந்து வருகின்றன. இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளின் எண்ணிக்கை, உலகில் வேறு எந்த மைதானத்திலும் செய்யப்பட்டிருக்காது.
அறிவியல்
நாசாவில் நுழைந்தது எப்படி? - 'பெர்சவரன்ஸ்' ஸ்வாதி மோகன் நேர்காணல்
பெர்சவரன்ஸ் விண் ஊர்தி சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, அதைத் தேவையான இடத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்புகள்தான்.
கலை கலாசாரம்
ரோமப் பேரரசு: எரிமலை சாம்பலில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழைய தேர்
கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது. அப்பகுதி இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது.
சிறப்புச் செய்திகள்
யார் இந்த அண்ணா? தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏன் இவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்?
காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர் அண்ணா. தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.
காணொளி, சாப்பிடுவதற்கு சம்பளமா? யூட்யூபில் அசத்தும் தமிழ் பெண்கள், கால அளவு 2,50
உணவு உண்பதை வீடியோவாக எடுத்து பதிவிடுவதன் மூலம் யூ டியூபில் பணம் சம்பாதிக்க தொடங்கியிருக்கிறார்கள் இந்திய பெண்கள் சிலர்.
திமுக மாவட்ட தேர்தல் அறிக்கை: கோவை சூயஸ் திட்டம் ரத்து, ராணுவ ஆய்வு மையம் அமைக்க உறுதி
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரதானமான தேர்தல் அறிக்கை தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என பிரத்யேகமான தேர்தல் அறிக்கையை இந்த முறை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. அதிகம் கவனம் பெறாத இந்தத் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இந்திய பிரதமர் மோதியின் படம் நீக்கம்: மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி, அரசு விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதானப்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ.
கடந்த முறை தாம் வெற்றி பெற்ற திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதால் அதிருப்தி அடைந்த சரவணன் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.
திமுக-வுக்கு திருப்புமுனையாக அமைந்த 1989 தேர்தல் வெற்றி - தமிழ்நாடு தேர்தல் வரலாறு
மூன்று முறை தொடர்ச்சியாக முதலமைச்சரான எம்.ஜி.ஆர் மரணமடைந்த பிறகு நடந்த தேர்தலில், தி.மு.க. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அ.தி.மு.க உடைந்து, நான்கு முனைப் போட்டி நிலவிய தேர்தலில் தி.மு.க. வென்றது எப்படி?
வாட்ஸ் ஆப் புதிய தனியுரிமை கொள்கை: மே 15-ம் தேதிக்குள் அப்டேட் செய்யவில்லை எனில் என்ன ஆகும்?
இந்த தனியுரிமை குறித்து வாட்சாப் பயனர்கள் பலருக்கும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத காலத்தில் ஒரு விதமான அச்ச உணர்வு ஏற்பட்டதால் பலரும் வாட்ஸ் ஆப் செயலியை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி? விவரங்களை சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர் பட்டியலில் இப்போது உங்கள் பெயரை சேர்த்தால் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க முடியுமா?
இலங்கை போர் காலத்தில் இயங்கிய 'குழந்தைகள் பண்ணை' - அதிர்ச்சி நினைவுகள்
இலங்கையில் பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஐரோப்பாவுக்கு குழந்தைகள் விற்பனை சந்தைகள் மூலம் விற்கப்பட்டன. பல தசாப்தங்களுக்குப் பிறகு கட்டாயப்படுத்தப்பட்டு தங்களுடைய பிள்ளைகளை கொடுக்க நேர்ந்த துயரத்தை நினைத்து வருந்தும் தாய்மார்ள், பெற்ற பிள்ளைகளை பார்க்க காத்திருக்கிறாரக்ள்.
திமுக தேர்தல் அறிக்கை: சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உறுதி, வேறு திட்டங்கள் என்ன?
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். முதல் படியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
தொலைக்காட்சி
பார்க்க, பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
15.03.2021
ஊடகவியல் கல்வி
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்